நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமாக கொரோனா பெற்றுந்தொற்று பாதிப்பு மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கையிலே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டிலேயே இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி மற்றும் அடுத்த நிதியாண்டில் 6 % முதல் 6.8% வரை வளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று நேரத்திற்கு முன்பாக இந்த அறிக்கையை முதலில் மக்களவை பின்பு மாநிலங்களவை என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் பல முக்கிய விஷயங்களில் வரி வசூல் தற்பொழுது திருப்திகரமான நிலையில் உள்ளது எனவும், பொருளாதாரத்தில் பல்வேறு அம்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக பணவீக்கம் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆகவே விலைவாசி உயர்வு தொடர்பான பிரச்சனைகள் இருக்காது என்றும் நம்பிக்கை அளிக்கும் வகையிலே தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசமான பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அப்படி பார்த்துக் கொண்டால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி பல்வேறு அம்சங்களிலே நம்பிக்கை அளிக்கும் வகையிலே இந்திய பொருளாதாரம் எப்படி பாதிப்புகளில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்து இருக்கின்றது என்பதை காரணம் காட்டும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. ஆகவே இந்த அறிக்கையில் அடிப்படையிலேயே நாளைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது வேகமான வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என நாம் நம்பலாம. ஏனென்றால் அதற்கான ஆதாரங்கள் அனைத்துமே இந்த அறிக்கையில் காணப்படுகின்றது.