BUDGET 2023: எதிர்பார்த்தது வரல!…. அந்த ஒன்னு மட்டும் தான் சொல்லும்படி இருக்கு?….மக்களை ஏமாற்றிய பட்ஜெட்…..!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. புதிய விதிமுறைப்படி 7 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை தவிர, வேறு எந்த அறிவிப்பும் சொல்லும்படி இல்லை. அதிலும் குறிப்பாக சிலிண்டர் மானியம், பெட்ரோல் விலை குறித்து ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழை-எளிய நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் மட்டுமே.