சைகை காட்டி பாலியல் தொந்தரவு…. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்… ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்த 2 சிறுமிகளும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி சிறுமிகளுக்கு தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அணைத்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான விஜயகுமார்(58) என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனால் விஜயகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply