“நிலப்பிரச்னைக்காக சொந்த தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் “அரியலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் !!..

அரியலூர் மாவட்டத்தில் நிலத் தகராறால் சொந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த கோவிலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவரது இரு மகன்களான ராஜேந்திரன் ரவி ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் அவர்கள் வீட்டிற்கு நடுவே வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் நீண்டகாலமாக ரவிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்து வருகிறது ரவி தனது வீட்டைச் சுற்றி தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார் இந்நிலையில் தென்னை மரங்களின் இலை கொப்புகள் ராஜேந்திரனின் வீட்டுச் சுவற்றில் உரசுவதாக கூறி ராஜேந்திரனின் மனைவி ரவி மனைவியிடம் சண்டையிட்டார் வாய்த்தகராறு அதிகமாகி ராஜேந்திரனுக்கு போன் செய்து சீக்கிரம் வருமாறு அவர் மனைவி கூறியுள்ளார் .

இதனையடுத்து கேரளாவில் கூலித்தொழில் செய்து கொண்டிருந்த அவர் அன்று இரவே புறப்பட்டு மறுநாள் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் வந்தவுடனே ரவியுடன் வாய்த்தகராறில் ஈடுபட சண்டை முற்றி ராஜேந்திரன் ரவியை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். இதனை கண்ட பொதுமக்கள் ரவியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார் இதனையடுத்து திருமானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்