“அண்ணனை வெட்டிவிட்டு தப்பிய தம்பி” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு  இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார்.

மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார், பாலாஜியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன  மேலும் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ள தாமோரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *