பழுதடைந்த சாலை ..பொதுமக்கள் அவதி!!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த  சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது .   அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில்  சேதம் அடைந்துள்ளதால்  விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *