“இந்த வழியா யாரும் போகக்கூடாது” இடிந்து விழுந்த தரைப்பாலம்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!!

கனமழை காரணமாக தரைப் பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக செல்கின்றது. மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கூவம் ஆற்றில் அமைந்துள்ள பாலத்தின் ஒரு பகுதி நீரில் அடித்து செல்லப்பட்டது.

எனவே பொது மக்கள் தரைத்தளத்தை பயன்படுத்த கூடாது என்பதற்காக ஊராட்சிமன்ற சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகும் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் பலர் திரண்டு வந்து கண்டு களித்தனர். இந்த பாலம் இடிந்து உள்ளதால் பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *