BREAKING : உ.பி. – தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.1000 – முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உத்தரப்பிரதேஷ மாநில தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனா வைரஸ் பரவல் , தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . பெரிய பெரிய மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் விசா கட்டுப்பாடு , போக்குவதாது சேவை நிறுத்தம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நாடு முழுவதும் நாளை சுய ஊரடங்கை அனைவரும் பின்பற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அச்சத்தால் தொழில்நிறுவனக்கள் மூட பட்டுள்ளதால் பல்வேறு வகையில் அடித்தட்டு மக்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் தினக் கூலிகளின் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 15 லட்சம் தினக்கூலி பணியாளர்கள் , கட்டடத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுமென்று அம்மாநில முதல்வர் யோகி ஆதிதயநாத் அறிவித்துள்ளார். இதனால் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை சற்று ஆறுதல் அடையும் என்று நம்பபடுகின்றது.