BREAKING: ”நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு” ம.பி. காங். அரசுக்கு செக் …..!!

மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த  22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து  விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில முதல் அமைச்சர் கமல்நாத் கூறியிருந்த நிலையில் தற்போது அது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் நாளை மத்திய பிரதேச சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்து வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதே போல போல நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க விரும்பினால் மாநில DGP ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி செய்வதிறியது திகைத்துள்ளது.