BREAKING : ”கோவையில் பயங்கரவாதிகள்” 3 பேரின் புகைப்படம் வெளியீடு..!!

கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருந்தது.இதையடுத்து கோவை அவினாசி சாலை,  திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 6 பேர் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில்  ஊடுருவிய பயங்கரவாதிகள் என கூறப்படும் சந்தேக நபர்களின் 3 பேர் புகைப்படம் மற்றும்  4 வாகனத்தின் எண்களும்  வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.