BREAKING : ”கோவில் , தேவாலயம் , மசூதி” வழிபாடு ரத்து – முதல்வர் அறிவிப்பு …!!

வருகின்ற 31ஆம் தேதி வரை கோவில்களில் , தேவாலயங்களில் வழிபாட்டை ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மசூதிகள் , தேவாலயங்களில் தற்காலிகமாக வருகின்ற 31ஆம் தேதி வரை வழிப்பாட்டை ஒத்திவைக்கப்படவேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர்க்கான பட முடிவுகள்

மேலும் மளிகை கடைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான சிறப்பு மருத்துவமனை. சிறிய கடைகளுக்கு இதுவரை தடையேதுமில்லை, பெரிய அளவிலான வாரச்சந்தைகளுள் தான் 31ம் தேதி வரை மூடுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பெரிய நகைக் கடைகள் , பெரிய ஜவுளிக் கடைகள் , பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.