BREAKING: ”செப்.4 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்தை  செப்.4 வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வங்கி பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடி , மல்லையா ஆகியோரும் இதே போல தப்பி சென்று விடுவார்கள் எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் வாதத்தை முன்வைத்தார்.

இதையடுத்து ப.சிதம்பரத்தை செப்டம்பர் முதல் வாரம் வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கிற்கான தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அவரை கைது செய்யக் கூடாது என்பதை தெரிவித்துள்ள நீதிமன்றம் ப.சிதம்பரம் எத்தனை முறை விசாரணைக்கு ஆஜரானார் , அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன , அவர் அளித்த பதில் என்ன என்ற பல்வேறு விஷயங்களை சீலிடப்பட்ட கவரில்; அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக முத்திரையை பதித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.