BREAKING: நாய்களும் காக்கைகளும் கொத்தித் தின்னுகிறது…. இந்தியாவை உலுக்கும் பரபரப்பு புகைப்படம்…!!

கங்கை நதியில் வீச பட்டுள்ள சடலங்களை காக்கைகளும், நாய்களும் கொத்தி தின்னும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக கங்கையாற்றில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

பீகார் மாநிலம், பக்சர் மாவட்டம், சவுக்கா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அங்கு சென்றபோது ஆற்றின் கரை ஓரத்தில் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட பல சடலங்கள் கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த சடலங்கள் அனைத்தும் உத்திரப்பிரதேசத்தில் கொரோனவால் இறந்தவர்களின் உடல்கள் என்று பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சடலங்களை காக்கைகளும், நாய்களும் கொத்தி தின்பதால் மாசு ஏற்பட்டு ரெண்டு வித நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *