#BREAKING : ”ஷேர் சாட் இல் வெளியான வினாத்தாள்” கதிகலங்கும் கல்வித்துறை…!!

ஷேர்சேட் ஆப்பில் வினாத்தாள் வெளியாகியதாக குற்றசாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் இரு நாட்களுக்கு முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பல்வேறு தேர்வுக்கான வினாத்தாள்கள் இப்படி முன்னதாகவே சேர் சாட்டில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேர் சாட் அப்பில் கல்வி மற்றும் தொழில் நுட்பம் என்று தனியாக ஒரு பகுதி இருக்கின்றது. அதை ஓபன் பண்ணி பார்த்தல் தெளிவாக தெரிகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு  வினாத்தாள் வெளியானது உண்மைதான் என்று. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.