NO கூட்டம், NO போராட்டம் …. அனுமதி கொடுக்காதீங்க….. போலீசுக்கு உத்தரவு ….!!

வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக , ஆதரவாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல இடங்களில் போராட்டங்கள் ஒத்தி வைக்கப் பட்டதாகவும், சில இடங்களில் மட்டும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு நாளையோ , நாளை மறுநாளோ தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் காவல்துறையினர் அனுமதி வழங்குமா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் முறையாக பரிசீலித்து முடிவெக்கும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் 21ம் தேதி  வழக்க்கை ஒத்திவைத்து நீதிபதி பல உத்தரவாய் பிறப்பித்தார்.

அப்போது ஏப்ரல் 21ஆம் தேதி வரை  ஆர்ப்பாட்டம் , போராட்டம் , பேரணி செல்வதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.

எனவே  தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டால் அதனை மாற்றி வைக்க முடியுமா ? அல்ல குறைந்த அளவில் பங்கேற்குமாறும் குடும்பத்தினரிடமும் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.