பிரேக்கிங் நியூஸ் படம் குறித்து பட நாயகி பானுஸ்ரீ ஓப்பன் டாக்…!!

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதுகுறித்து பானுஸ்ரீ கூறுகையில், இந்த படத்தில் நான் ஜெய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பாவித்தனமான அவரை பார்த்து காதல் செய்து, பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் அவரை விட்டு பிரிந்து விடுகிறேன். முதலில் குறும்பு தனமாக இருக்கும் நான் திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக அமைதியாக மாறி விடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

Image result for ஜெய்,பானுஸ்ரீ

இது குறித்து தொடர்ந்து பேசிய பானுஸ்ரீ, பிரேக்கிங் நியூஸ் படம்,  ஒரு சாதாரண மனிதன் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு ஃபேண்டஸி நிறைந்த ஆக்‌ஷன் படமாகும். ஒரு நல்ல எமோஷன் கதையுடன் கூடிய கருத்துக்களை கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 15 நாட்கள் முடித்து விட்டு, சென்னையில் நடைபெற இருக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் தாம் கலந்து கொள்ள போவதாக அவர் தெரிவித்துள்ளார்.