போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் பிரதிநிதிகள் , தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மருத்துவக்கல்வி இயக்குனர் , சுகாதார துறை இயக்குனர் பங்கேற்ற்றனர்.6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து எந்த வித உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். தற்போது தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் பங்கேற்ற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.