இன்று நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு  நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. பல்வேறு தடைகளை சந்தித்த நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில்  உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் இன்று காலை 7  மணிக்கு தொடங்கும் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு  மாலை 5 மணி வரை  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்க்கு உயர்நீதி மன்றம் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டத்தையடுத்து சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.