#BREAKING: தட்டி தூக்கிய தங்கம்… ”முக்கிய பொறுப்பு” திமுக அறிவிப்பு…!!

அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ்  செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில்  இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக  திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.