மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 47 பேரின் நியமனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு,  அவர்களுடைய நியமனம் என்பது நீக்கப்பட்டு இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை ஆவினில் உதவி பொது மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. இதில் பல்வேறு விதிமுறைகள் நடைபெற்றதற்காக கூறப்பட்டது.

குறிப்பாக  அருப்புக்கோட்டை அருகே ஒரே கிராமத்தில் உள்ளவர்களை வரவைத்து சுமாராக 17 பேரையும் உடனடியாக தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான ஒரு விரிவான விசாரணையை மதுரை ஆவின் ஆணையர் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் 47 பேர் முறைகேடாக பணியில் சேர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு,  அவர்களுடைய நீக்கம் என்பது தற்பொழுது வந்திருக்கிறது.