குடியரசு தின தேனீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். குடியரசு தினத்தில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். நாளை நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க்கு வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்தார் ஆளுநர் ரவி.
ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவிவரும் சூழலில் ஆளுநர் ரவி அழைத்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றும், தமிழ்நாடு அரசின் இலச்சினையை பொறித்தும் தேநீர் விருந்துக்கு அழைப்பிதழ் தயாரித்துள்ளது ஆளுநர் மாளிகை.