அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 124 எம்எல்ஏக்களும்  பங்கேற்று இருக்கிறார்கள். இதில் சில  வலியுறுத்தல்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி வரை சட்டசபை நடைபெறும். அதில் திமுக எம்எல்ஏக்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும் போது,  கவர்னர் அவர்களை பற்றி தாக்கி பேசக்கூடாது.

குறிப்பாக நேற்று நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவு படுத்த கூடாது. இது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் திமுகவில் 30 மாவட்டத்தில் அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். மாவட்டம் செயலாளர்கள் இருக்கிறார்கள். கட்சி தொண்டர்கள் பேனர்கள்,  போஸ்டர்கள் கவர்னருக்கு எதிராக ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தலையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.