காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.