விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால் 5000 சன்மானம் வழங்கப்படுமென்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்ட போது சுகாதாரத் துறைக்கான பட்ஜெட்டில் சாலை விபத்து ஏற்படும் போது உடனடியாக அந்த பகுதியில் செல்லக் கூடிய பொதுமக்கள் அவர்களை கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களுக்கு உடனடியாக ரூ 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் , இதற்காக அரசு கொள்கை முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருக்கின்றார் . இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.