Breaking : வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – தமிழகத்தை பாதிக்குமா?

வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் இதனால் தமிழகத்தை பாதிக்குமா என்று மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் உருவாக இருப்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for Bulbul 'storm

இதனிடையே அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது புல் புல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதிலும் அந்தமான் மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீன் அவர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *