நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுவதாக இருந்தது.
அதன்படி அவர் தேசியக் கொடியை தற்போது ஏற்றினார். அதன் பிறகு அவர் கொடியை நோக்கி சல்யூட் அடித்தார். இந்த விழாவில் முன்னதாக கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வரவேற்றார். மேலும் இந்த விழாவில் முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.