BREAKING: 60 ஒப்பந்தங்கள்…. 74,000 பேருக்கு வேலை…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அவ்வபோது முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகின்றது. இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்று 6000 கோடிக்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.இந்நிலையில் தமிழக அரசு இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார்.

இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்திற்கு 1.2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும், 74 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் 21 நிறுவனங்கள் புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *