உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான இந்த குழுவில் தலைமைச் செயலாளர், தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஜன.6,7இல் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது.