சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 17 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சாப்பிடாமல் இருந்ததால், சில ஆசிரியர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு, திடீர் திடீரென்று மயக்கமடைந்தனர். உடனே அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.