மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் என்றும், ₹5 கோடி மதிப்பில் புதிய மாவட்ட நூலகம் அமைக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார்.