தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-வதாக இசைக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தாய் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்குச் சற்றும் உடன்பாடில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
சில தவிர்க்க முடியாத காரணங்களாலேயே இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது பாடலாக ஒலிக்கப்பட்டதாகவும், ஆனால் இனிவரும் காலங்களில் இந்த புதிய நடைமுறை ஒருபோதும் பின்பற்றப்படாது என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பண்பாடு மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் இந்த அரசு உறுதியாக இருக்கும் என்பதை அமைச்சரின் இந்த விளக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
