முதலமைச்சர் விஜயின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அரசு பணி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்துடன் போதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தது.

தமிழக அரசு எப்போதுமே அறிவார்ந்த கருத்துக்களை மட்டும் தான் இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் எனவும் மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் விமர்சித்தனர். குறிப்பாக தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஜோதிடருக்கு அரசு பணி வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோன்று தமிழகத்தை ஜோதிடர் மயம் ஆக்குவதாகவும் பலர் குற்றம் சாட்டிய நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சொன்னது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையிலேயே வாக்கு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பணி வழங்கிய உத்தரவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் எதிர்ப்புகள் வலுத்த உடனே தமிழக அரசு உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெற்றது வரவேற்பை பெற்றுள்ளது