
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பு 47 காசுகள் சரிந்து முதல் முறையாக 86.43 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலர்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதாலும் அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறி வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.
1947 ஆம் வருடம் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ. 3.30 என்று இருந்த நிலையில் 2025 ஆம் வருடத்தில் 86.43 என சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.