ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார்.  அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஹாக்கி வீரர்களுக்கிடையே மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் 2023-ம் ஆண்டில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.