BREAKING: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ரஜினி…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தன்னை காண கூட்டமாக கூடிய ரசிகர்களை வெளியே செல்ல அஜித் அறிவுறுத்தினார்.

அதன்பிறகு தனது மனைவியுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்துள்ளார். அவர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்