ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவராகிய பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கரூரில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலம் நடைபெற்றது.

அந்த ஊர்வலத்தில் போலீசார் உடன் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அதாவது போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.