நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 7 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், முதல் ஆளாக திமுகவில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் விருப்ப மனு அளித்துள்ளார்.