ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த விமான நிலையமும் அமையக்கூடாது என்று ஒப்பந்தம் இருப்பதால் ஓசூரை கைவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.