தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் போலவே விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் திருமா மற்றும் ரவி குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.