மூடா விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சித்த ராமையா நேரில் ஆஜராக வந்தார். அரசு வாகனத்தில் பாதுகாப்புடன் வராமல் வேறு காரில் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சித்த ராமையா வந்துள்ளார். மைசூர் நகரின் மையப் பகுதியில் தனது மனைவிக்கு முறைகேடாக 14 வீட்டு மனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் சித்த ராமையாவின் மனைவி பத்மாவதி அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. சித்திராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு ஆஜராக வந்த போது பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.