BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வருமானவரித்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.