அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். இந்த தேர்தலில் எலக்ட்ரோல் வாக்குகள் முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் 270 வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
அந்த வகையில் தற்போது டொனால்ட் டிரம்ப் 270 எலக்ட்ரோல் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 214 எலக்ட்ரோல் வாக்குகளையும் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிட்ட நிலையில் உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அவர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை கொடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.