பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி இறந்தார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக்சிங் சவுத்ரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இன்று காலை லூதியானாவில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். “எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்..,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/puneet_banga/status/1614114512323629057