#BREAKING: முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் – மத்திய அரசு!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தார்.. மேலும் அவர், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார்..

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல் நாளிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்..

பல எதிர்க்கட்சிகளும் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *