BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க நேற்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் தமிழகத்திலும் பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் மிக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *