BREAKING: மக்களே காலையில் அதிர்ச்சி செய்தி…. மனச தேத்திக்கொங்க….!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில்தற்போது நாளுக்கு நாள்  உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.98.14-க்கும், டீசல் விலை 127காசுகள் அதிகரித்தது ரூ.92.31-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6.30 மணி முதல்  அமலுக்கு வந்துள்ளது. தினசரி விலையை உயர்த்தாமல் விட்டுவிட்டு உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *