தமிழகத்தில் தகுதி வாய்ந்த 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் உத்திரவாத திட்டம் மூலம் முந்தைய ஆண்டை விட 203 சதவீதம் அதிக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.