தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் இயல்புநிலை திரும்பியது. ஆனால் புயல் கரையை கடந்த பின்னர் அது நீண்ட நேரமாக புதுச்சேரியில் நீடித்ததால் அங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. இதேபோன்று தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு ஆளான நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று தான் வருகிறது.
பொதுமக்கள் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 2000 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக 2000 கோடி கேட்ட
நிலையில் இன்று மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் வந்த ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிற்கு 944.80 கோடி ரூபாய் நிதியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநில பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.