தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் அது வலுவிழந்துள்ளது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது விழுப்புரத்திலிருந்து 20 km தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.