
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதாக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆல் நிறைவேற்றப்பட்டது. அதாவது பெண்களை பின்தொடர்ந்தால் 5 வருடம் சிறை தண்டனை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்கு 10 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக குடியரசு தலைவருக்கு அந்த மசோதாக்கள் அனுப்பப்பட உள்ளது. மேலும் குடியரசு தலைவரும் ஒப்புதல் கொடுத்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.